இன்று தனது 41 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய்!!

571

vijay

குழந்தை நட்சத்திரமாய் வெற்றி படத்தில் அறிமுகமாகி இன்றுவரை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி மகுடத்தை தலையில் சுமந்து வரும் இளையதளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள்.

விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்துள்ள புலி படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விஜய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.