வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!!

586

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையிலையே மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தினுள் எவரும் உட்செல்ல விடாது மண்டப வாயிலில் அமர்ந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து கடந்த அமர்வின் போதும் உறுப்பினர்கள் சபை அமர்வை ஆரம்பிக்க விடாது சபை நடுவில் கூடி போராட்டம் நடாத்தினார்கள்.

அதன் போது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அரச அதிபர் இடமாற்றம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமருடன் கலந்துரையாட உள்ளதாகவும், விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் எனவும் உறுதி அளித்ததால் அன்றையதினம் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்னமும் அரச அதிபர் இடமாற்றம் செய்யப்படவில்லை என கூறியே இன்றைய தினம் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 23 4