பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உக்கிர அனல் காற்றுக்கு 200 பேர் பலி!!

301

Pak

பாகிஸ்­தானின் சிந்து மாகா­ணத்தில் வீசிய அனல் காற்றால் 200 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்திகள் தெரி­விக்­கின்­றன.

அதி­க­ள­வான மர­ணங்கள் கராச்சி நக ரில் இடம்பெற்­றுள்­ளன. அந்­ந­கரில் 45 பாகை செல்சியஸுக்கும் அதி­க­மான வெப்­ப­நிலை நில­வு தாக கூறப்­ப­டு­கி­றது.

அள­வுக்­க­தி­க­மான வெப்பம் கார­ண­மாக மின்­வி­சிறி மற்றும் குளி­ரூட்­டி­களை இயக்க அதி­க­ளவு மின்­சாரம் உப­யோ­கிக்­கப்­பட்டு வரு­வதால் மின் பற்­றாக்­கு­றையை ஈடு­செய்ய அந்­ந­கரில் மின்துண்டிப்­புகள் இடம்­பெற்று வரு­வதால் மக்கள் கடும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கூறப்படுகிறது.

கராச்சி நக­ரி­லுள்ள ஜின்னா மருத்­து­வ­ம­னையின் தலைவர் கூறு­கையில், வெப்­பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் அனேகர் வயோ­தி­பர்கள் எனத் தெரி­வித்தார். கடந்த சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து அனல் காற்றால் கராச்சி நகரில் மட்டும் 114 பேர் உயி­ரி­ழந்­துள்ளனர்.

இந்­நி­லையில் நேற்றுத் திங்­கட்­கி­ழமை வரை வீசிய இந்த அனல் காற்று இன்று செவ்வாய்க்கிழமையும் தொடரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக பாகிஸ்­தா­னிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி அனல் காற்றால் அயல்நாடான இந்தியாவில் சுமார் 1,700 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.