பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் வருடமொன்றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 122 கைவிடப்பட்ட பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
கென்ட் பிராந்தியத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்வனா வலென்ரினோ லொக் (55 வயது) என்ற பெண்ணே இவ்வாறு பூனைகளை நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
அவரது பூனைகளை வளர்க்கும் செயற்பாட்டிற்கு அவரது கணவர் டோனி எதுவித மறுப்பையும் தெரிவிக்காது ஆதரவளித்து வருகிறார்.
இது தொடர்பில் வலென்ரினோ கூறுகையில், தான் இவ்வாறு பூனைகளை வளர்ப்பதை அறியும் எவரும் முதலில் கேட்கும் கேள்வி நீங்கள் திருமணமானவரா என்பதே என தெரிவித்தார்.
எந்த ஆணும் இத்தனை பூனைகள் வளர்ப்பதை சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்றே பலரும் நினைப்பதாக அவர் கூறினார்.