விசுவமடு கரீஸ்ஸின் முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!!(படங்கள்)

954

செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடும், கவிஞர் விசுவமடு கரீஸ் எழுதிய ‘முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய்’ கவிதை நூல் வெளியீடானது, வன்னியின் விசுவமடு சுண்டிக்குளம் புல்வெளியில் இடம்பெற்றது.

வழமையான வெளியீட்டு அம்சங்களுக்கு அப்பால் புதுமையான அம்சங்களை வெளிப்படுத்தும் நூல் வெளியீடாக இதனைக் காணமுடிந்தது. வாழை மரத்தில் வைக்கப்பட்டு சுடர்கள் ஏற்றப்பட்டது. நிகழ்வுக்கு பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆசியுரையை நாகதம்பிரான் ஆலய குருக்கள் சிவசிறீ சிற அவர்கள் வழங்கினார்.

வரவேற்புரையினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குனர் யோ.புரட்சி வழங்கினார். வாழ்த்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருசிவசக்தி ஆனந்தன் அவர்கள், மற்றும் திரு.சிவஞானம் சிறீதரன் ஆகியோர் வழங்கினர்.

கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுனர் திரு ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை செல்வி சங்கீதா அளித்தார். நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வெளியிட, முதற் பிரதியினை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

வாழ்த்துக் கவிதைகளை பிள்ளைக்கவி ஜொய்சி, கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோர் வழங்கினர். நடனங்களை யாழ்ப்பானத்திலிருந்து வருகை தந்த வினிதா, விசுவமடு சுபேத, சுதந்திரபுரம் மோகனப்பிரியா ஆகியோர் வழங்கினர். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவுனர் திரு வவுனியூர் உதயனன் அவர்களும் வாழ்த்துச்செய்தியினை வழங்கி இருந்தார்.

பண்பலை வேந்தன் ரி.எஸ் முகுந்தன் அவர்கள் தலைமையில் கவியரங்க வடிவ விமர்சனம், மற்றும் பட்டிமன்றம் என்பனவும் இடம்பெற்ற‌து. கவியரங்கில் கவிஞர்கள் நெடுந்தீவு தனு, சிவரமணி, ஆர்.எஸ் கலா, ஆரதி, தனுஜா, புலவூரான் ரிஷி, கவிதாயினி ஜோதிமலர், மருத்துவர் மாதவராஜா, பண்டத்தரிப்பு வினேஸ் ஆகியோரும்,

பட்டிமன்றத்தில் கம்பீரக்குரலோன் நாகேந்திரராசா,சைவப்புலவர் திலகானந்தம், பிருந்தாவனம் ஆசிரியர் சிவராணி, திரு புலேந்திரன், திரு விக்ரர், கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோரும் பங்கெடுத்தனர். கவிஞர் கரீஸ், மற்றும் யோ.புரட்சி ஆகியோர்க்கு கனடா படைப்பாளிகள் உலகம் பொன்னாடை போர்த்தி கெளரவித்தது. நிறைந்த உறவுகள் கூடிய இந்த நிகழ்வில் ஏற்புரையினை நூலாசிரியர் விசுவமடு கரீஸ் நிகழ்த்தினார்.

DSC02278 DSC02279 DSC02281 DSC02282 DSC02285 DSC02288 DSC02297 DSC02300 DSC02301 DSC02309 DSC02310 DSC02312 DSC02317 DSC02326 DSC02328 DSC02330 DSC02331 DSC02332 DSC02333 DSC02334 DSC02336