கிளிநொச்சியில் காணாமல் போன குழந்தை குறித்து விசேட தேடுதல் நடவடிக்கை!!

675

Baby

கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி காணாமல் போன 03 வயது சிறுமியை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். எனினும் இதுவரையில் குறித்த சிறுமி கிடைக்கவில்லை.

உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ம் திகதி தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில், குழந்தை குளித்து விட்டதனால் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் குழந்தையை தாய் அனுப்பி வைத்துள்ளார்.

தாய் குளித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டில் குழந்தையை காணவில்லை என பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

வீட்டிற்கு குழந்தையை அழைத்து வந்த பக்கத்து வீட்டுக்காரர் மேல் தான் சந்தேகப்படுவதாக குழந்தையின் தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமி தொடர்பில் அவரது தாயாரின் முறைப்பாடுகளுக்கமைய பொலிஸார் சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை தேடி இதுவரையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் மாறாக கிராம மக்கள் அனைவரும் பிரதேசம், பாழடைந்த இடங்கள், வீடுகள் குளங்கள், வீதிகள் என அனைத்து இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.