கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)

914

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து பரந்தன் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அருகாமையை வந்த சமயம் முன்னால் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை வேகமாக கடக்க முற்பட்டபோது கிளிநொச்சி பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்ற பெண் மீது மோதியதில் பெண் ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் 23 வயதான துரைராசா சித்திராதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

DSC00536 DSC00537 DSC00538 DSC00539 DSC00540 DSC00541 DSC00542 DSC00543 DSC00544 DSC00545 DSC00546 DSC00547