வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)

689


அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா பாடசாலை அதிபர் திரு செ.பவேந்திரன் தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டார்



அத்துடன் விருந்தினர்களாக ஸ்ரீஸ்கந்தராஐா (வலயக்கல்வி- பணிப்பாளர்), வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.இந்திரராஐா, திரு.லிங்கநாதன், திரு.தியாகராஐா, திரு.சிவமோகன், M.P.நடராஐா மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், தரணிக்குள கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , ஆலய பரிபாலன சபையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

-பிராந்திய செய்தியாளர்-



1 2  4 6 7 8 9 10 11 12 13 14 15 16