மலசலகூட கடதாசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை!!(படங்கள்)

392


அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கடதாசிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார மணப்பெண் ஆடைகளை அணிந்து வலம் வந்து பார்­வை­யா­ளர்­களை வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளனர்.

11 ஆவது வரு­டாந்த மலி­ வான மல­ச­ல­கூட கட­தா­சி­யா­லான மணப்பெண் ஆடை­க­ளுக்­கான போட்டி நிகழ்ச்­சி­யி­லேயே யுவ­தி­களின் இந்த அலங்­கார அணி­வ­குப்பு இடம்­பெற்­றது.



மல­ச­ல­கூட கட­தாசிச் சுருள்கள், ஒட்டுப் பசை, நாடாக்கள் மற்றும் நூல்கள் என்­ப­வற்றைப் பயன்படுத்தி இந்த மணப்பெண் ஆடைகள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தப் போட்டி நிகழ்ச்­சியில் தென்­னஸி மாநி­லத்தில் பிரென்ட்வூட் எனும் இடத்தைச் சேர்ந்த டோனா போப் வின்­கி­ளேயர் என்ற நவ­நா­க­ரிக ஆடை வடி­வ­மைப்­பா­ளரால் உரு­வாக்­கப்­பட்ட மலசல­கூட கட­தா­சி­யா­லான மணப்பெண் ஆடை முத­லி­டத்தைப் பெற்று 10,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பரிசை வென்­றுள்­ளது.



அவர் இந்த ஆடை உருவாக் கத்திற்காக 22 மலசலகூட கடதாசிச் சுருள்களைப் பயன்படுத்தி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.



1 2 3 4 5