மனைவி இல்லாத வேளை 13 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது!!

543

Abuse

13 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் கூறப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி – மாம்புரி பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் வீட்டில் இல்லாத வேளையில் தந்தை இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் வல்லுறவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்பின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் பொலிஸார் சந்தேகநபரான சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.