
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 78 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்லும் போது கிரின்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை காலிதுறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





