ஈன்ற குழந்தையை கழுத்து நெறித்து கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி!

992

Police

எல்ல – கீனலன்வத்த பகுதியில் தாய் ஒருவர் தனது சிறுவயது மகளை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார். இரண்டரை வயது குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை கொலை செய்த தாய் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் பிரதேசவாசிகள் அவரை காப்பாற்றியுள்ளனர். தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.