சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (26.06) வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8.30 மணிக்கு தொடக்கம் 9.00 மணி வரை இவ் விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் 600இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இனிவரும் காலங்களில் இப் பிரதேசம் மதுப்பாவனை அற்ற பிரதேசமாக மாற்றம் அடையவேண்டும் எனவும் மாணவர்கள் கோசங்களை எழுப்பினர்.
-பிராந்திய செய்தியாளர்-






