வவுனியா பிரதேச செயலகத்தால் ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்­டிகள்!!

769

School

தமிழர் பண்­டி­கை­களில் ஒன்­றான ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு வவுனியா பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட பாட­சாலை மாணவர்கள் மத்­தியில் பல்­வேறு போட்­டிகள் நடாத்­தப்­ப­ட­வுள்­ளன.

வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக மேற்­படி போட்­டிகள் நடாத்­தப்­ப­ட­வுள்­ளன என வவு­னியா பிர­தேச செய­லாளர் கா. உத­ய­ராசா அறி­வித்­துள்ளார்.

தரம் 3 முதல் 5 வரை­யான வகுப்பு மாண­வர்கள் மத்­தியில் சோமசுந்தரப்பு­ல­வரும் ஆடிப்­பி­றப்பும் என்ற தலைப்பில் (5நிமிடம்) பேச்சுப் போட்­டியும், தரம் 10, 11 வகுப்பு மாண­வர்கள் மத்­தியில் சோமசுந்த­ரப்­பு­லவர் ஒரு தமிழ்ப் பண்­பாட்டுப் புலவர் என்ற தலைப்பிலான (1000 – 1500 சொற்கள்) கட்­டுரைப் போட் டியும்,
சோம­சுந்­த­ரப்­பு­லவர் பாடிய ஆடிப்­பி­றப்­பிற்கு நாளை விடு­தலை என்ற பாடலை மைய­மா­கக்­கொண்டு குழுப்­பாடல் போட்­டியும் (தரம் 6 முதல் 9 மாண­வர்­க­ளுக்­கா­னது),

ஆடிப்­பி­றப்­பிற்கு நாளை விடு­தலை என்ற பாடலை மைய­மா­கக்­கொண்டு தனிப்­பாடல் போட்­டியும் (தரம் 11, 12 மாண­வர்­க­ளுக்­கா­னது) தற்­கால சூழ்­நி­லையில் தமிழர் பண்­டி­கைகள் என்ற தலைப்பில் கவிதைப் பாடல் போட்­டியும் (தரம் 10 முதல் 12 மாண­வர்­க­ளுக்­கா­னது) நடாத்­தப்­ப­ட­வுள்­ளன.

குறித்த போட்­டி­களில் பங்­கு­பற்ற விரும்பும் வவு­னியா பிர­தேச பாடசாலைகள் எதிர்­வரும் 03.07.2015 இற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை பிர­தேச செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்க முடியும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அறிவித்துள்ளார்.