
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.





