சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற முதியவருக்கு விளக்கமறியல்!!

593

Abuse

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.

குடிநீர் எடுப்பதற்காக அன்றாடம் அயல் வீட்டுக்குச் சென்றுவரும் குறித்த சிறுமி கடந்த 19ஆம் திகதி வழமை போன்று குடிநீர் எடுப்பதற்குச் சென்றுள்ளார்.

அதன்போது அங்கு தனிமையில் இருந்த அயல் வீட்டு வயோதிபர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி 100 ரூபா வழங்கி துஷ் பிரயோகம் செய்யமுயன்றுள்ளார்.

அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதியவரைக் கைதுசெய்திருந்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியமை குறிப் பிடத்தக்கது.