வவுனியாவில் விபத்தில் சிக்கியவரிடம் பணத்தை களவாடிய நபர்கள் : இப்படியும் சில மனிதர்கள்!!(படங்கள், காணொளி)

552

கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற விபத்தின்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் பணப்பை களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற முச்சக்கரவண்டி -வான் விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த கர்ப்பிணித் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது தந்தையிடம் சிலர் ATM அட்டையின் இரகசிய இலக்கத்தினை கோரியபோது அவரது உறவினரிடம் வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவரது உடையில் இருந்த பணப்பை களவாடப்பட்டுள்ளது.

இத் தொலைந்த ஆவணங்கள் தொடர்பாக சுப்பையா சிவகுமார் என்பவர் பொலிசாரிடம் முறையீடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகநபர் அகப்பட்டார்.

இதன் வழக்கு 09.04.2015 அன்று நடைபெற்று 12.05.2015 வரை அவரை சிறையில் அடைத்தனர். இதன் 2வது வழக்கு 12.05.2015 நடைபெற்றபோது பிரபல சட்டத்தரணிகள் மூவர் சந்தேகநபர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி ATM மூலம் மோசடி செய்யப்பட்ட குறித்த பணத்தை வழங்குவதாக தெரிவித்தனர்.

இதன் இறுதி வழக்காக நேற்று (26.06.2015) இடம்பெற்ற போது ATM மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டார். இதன் போது மோசடி செய்யப்பட்ட பணம் உரிய நபருக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நீதி கிடைக்குமா?

-பிராந்திய செய்தியாளர்-

Capture1 2 3 4 5 6

தொடர்புபட்ட செய்தி : வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!