வவுனியா பேயாடிக்கூழாங்குளத்தில் பஸ் தரிப்பிடம் விசமிகளால் சேதம்!!(படங்கள்)

827

வவுனியா பேயாடிக்கூழாங்குளம் பகுதியில் பயணிகளின் நலன்கருதி கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுவந்த பஸ் தரிப்பிடம் நேற்று திறக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் (26.06) விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

முகப்பில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பகுதி உடைக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி அப்பகுதியில் உள்ள நலன்விரும்பியால் அமைக்கபட்ட இவ் பஸ் தரிப்பிடம் உடைக்கபட்டமையானது கவலையளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

20150628_092339 20150628_092359 20150628_092421 20150628_092421_1 20150628_092440 20150628_092457