வவுனியாவில் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன் தப்பியோட்டம்!!

629

Abuse

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டுப் பகுதிக்கு யுவதியை அழைத்துவந்த ஓர் இளைஞன் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது யுவதி சத்தமிட்டு அயலவர்களை அழைத்தபோது குறித்த இளைஞன் தப்போயோடியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இன்று 28.06.2015 காலை 10 மணியளவில் தாண்டிக்குளம் பகுதியிலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டுப் பாதையூடாக குறித்த இளைஞனும் யுவதியும் நடந்து சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இப் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி யுவதியை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற இளைஞனின் செயலால் அதிர்ச்சியடைந்த யுவதி கூக்குரலிட்டுள்ளார்.

யுவதியில் அலறல் சத்தத்தைக் கேட்டு அயலிலிருந்தவர்கள் அப்பகுதிக்கு ஓடி வருவதை உணர்ந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடிச்சென்று விட்டார்.

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-