குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா?

416

Drinking

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூளையில் ஆழமாக பதிந்து விடுவது தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சமீபகாலத்தில் இரத்த அழுத்த நோய் சிகிச்சைக்குப் பயன்படும் “இஸ்ராடிபின்´ எனப்படும் மருந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மூளையில் குடி சம்பந்தப்பட்ட நினைவுகளை நீக்கி அவர்கள் குணமாக உதவும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ராடிபின் எனப்படும் அலோபதி மருந்து இரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது. இது ஏற்கனவே மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இஸ்ராடிபின் இருதய இரத்த குழாய்களில் உள்ள கால்சியம் படிவங்களை காலி செய்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளும் போது மூளையில் உள்ள கால்சியம் படிவங்களை நீக்குவதுடன் அதில் பதிந்துள்ள மது சம்பந்தப்பட்ட விஷயங்களை நீக்கி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், இஸ்ராடிபின் இரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுவதால், இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடாமல் இருக்க மற்றொரு மருந்தும் தேவைப்படும் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க பல்கலை விஞ்ஞானிகள் எலிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். சில எலிகளை ஆல்கஹாலுக்கு அடிமையாக்கி பின்னர் அவற்றிற்கு இஸ்ராடிபின் கொடுத்தனர். இஸ்ராடிபின் உட்கொண்ட எலிகளுக்கு ஆல்கஹால் மீது இருந்த நாட்டம் குறைவதை அவர்கள் கண்டுபிடித்தன.