உலகின் முதலாவது ரோபோ திருமணம்!!

381


உலகின் முத­லா­வது ரோபோக்­க­ளுக்­கி­டை­யி­லான திரு­மண நிகழ்வு ஜப்­பானில் இடம்பெற்றுள்ளது. சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த விநோத திரு­மணம் குறித்து சர்­வ­தேச ஊடகங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

டோக்­கியோ நகரில் இடம்­பெற்ற மேற்­படி திரு­மண நிகழ்வில் மண­மகன் ரோபோ­வான புரொயிஸும் மண­மகள் ரோபோ­வான யுகி­ரினும் திரு­ம­ணத்தின் போது முத்­தத்தை பரி­மாறிக் கொண்டு அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தன.



இந்த திரு­மண நிகழ்வில் பல்­வேறு சிறிய ரக ரோபோக்கள் உள்­ள­டங்­க­லாக 100 ரோபோக்கள் விருந்­தி­னர்­க­ளாக பங்­கேற்று திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்டு புது­மணத் தம்­ப­திக்கு வாழ் த்­து­களைத் தெரி­வித்­தன.

தொடர்ந்து புது­மணத் தம்­ப­தி­யான இரு ரோபோக்­களும் திரு­மண கேக் கை வெட்­டின.மண­மகன் ரோபோவை உரு­வாக்­கிய இலத்­தி­ர­னியல் உப­க­ரண உற்­பத்தி நிறு­வ­ன­மான மேவா டென்கியே இந்த திருமண நிகழ்வுக்கான ஏற்பாடு களை மேற்கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.



1 2