அமெரிக்காவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் விக்கிலீக்ஸ்!!

265

US

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால் பிரான்ஸ் நிதி அமைச்சர்கள் வேவு பார்க்கப்பட்டதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்தது என விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டது. இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாது என ஓபாமா உறுதி அளித்த பின்னரே பிரச்சனை ஓய்ந்தது.

ஆனால் தற்போது மீண்டும் அமெரிக்காவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இரண்டு பிரான்ஸ் நிதி அமைச்சர்களின் தொலைபேசி மற்றும் இணைய உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

2011 முதல் 2014 வரை அந்நாட்டின் நிதி அமைச்சர்களாக பதவி வகித்த பிரான்கோயிஸ் பரோயன் மற்றும் பியர் மொஸ்கோவிசி ஆகிய இருவரின் நடவடிக்கைகளும் வேவு பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி ஒப்பந்தங்கள், வணிக மற்றும் பட்ஜெட் தகவல் போன்றவற்றை அமெரிக்கா சேகரித்துள்ளது.

அமெரிக்காவும் பிரான்சும் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. நெருங்கிய நட்பு நாட்டிற்கே இந்த கதி என்றால் இந்தியா போன்ற மற்ற நாடுகளின் நிலையை பற்றி சொல்லவே தேவையில்லை.