வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி பிரதி அதிபர் திரு.முரளிதரன் தலைமையில் இன்று (30.06.2015) நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், தர்மபால ஆகியோரும், ஆரம்பக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.கணேசபாதம், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.விஜயகாந்தன், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் திரு.மகேந்திரன், முன்னாள் அதிபர் திரு.ஜெயதரன், கல்வி சமுகத்தினர் கலந்துகொண்டனர்.