கொழும்பு – டுபாய் விமானத்தில் சென்ற பயணிக்கு வலிப்பு : மும்பையில் அவசர தரையிறக்கம்!!

535

Dubai

கொழும்பில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

FZ551 என்ற டுபாய் விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து டுபாய் வழியாக மதீனா சென்ற இலங்கை பெண் 35 வயதுடைய உவைசா மொஹைதின் பிச்சாய் அப்துல் ரசீதுவிற்கு திடீர் மயக்கம் வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானத்தை அவசர தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் குறித்த பெண் செவன் ஹில்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.