வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

536

வவுனியா A9 வீதியில் இன்று(02.07.2015) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

A9 வீதி நோச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் வேகமாக வந்த மகேந்திரா ரக ஜீப் வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலம் ஒன்றின் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

சாரதி உறங்கியதால் இவ் விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில் வாகனத்தின் சாரதியும் நடத்துனரும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-சுகுமார்-

11696811_468888909952536_19186545_n 11655264_468893076618786_1748336995_n 11717048_468893316618762_1993066555_n