என்னை திருமணம் செய்யுமாறு ஒபாமாவை மண்டியிட்டு கேட்கப் போகின்றேன் : சிம்­பாப்வே ஜனா­தி­பதி!!

603

Obama

சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே, அமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்கு பயணம் செய்து அந்­நாட்டு ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­விடம் திரு­மணம் செய்­ வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளியிடவுள்­ள­தாக வேடிக்­கை­யாகத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவில் 50 மாநி­லங்­களில் தன்­னினச் சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு சட்­ட­பூர்வ அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கேலி செய்யும் வகை­யி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

பராக் ஒபாமா தன்­னி­னச்­சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கி­ய­தை­ய­டுத்து தான் முடி­வொன்­றுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­வித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்­படும் பட்­சத்தில், நான் வோஷிங்­ட­னுக்குச் சென்று பராக் ஒபா­மாவின் முன் முழந்­தா­ளிட்டு அவ­ரது கையை முத்தமிடுவதற்­காக தரு­மாறு கேட்பேன்” என அவர் கூறினார்.

“முறை­யற்ற புணர்ச்­சியை மேற்­கொள்­வ­தற்கு மனி­தர்­க­ளுக்கு இறைவன் தடை விதித்­துள்ள நிலையில், கிறிஸ்­துவின் கட்­ட­ளை­களை மீற அவர்கள் எவ்­வாறு துணிந்­தார்கள் என்­பதை என்னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை” என அவர் மேலும் தெரி­வித்தார்.

அமெ­ரிக்­கா­வா­னது உயர்ந்த கிறிஸ்­தவ கொள்­கை­களின் அடிப்­ப­டையில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள போதும், அரசியல் ரீதியான ஊழலால் தனது முடிவுக்கு மட்டுமே வழிவகை செய்யக்கூடிய பாதையில் செல் கிறது என முகாபே குறிப்பிட்டார்.