
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அநுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள் சிலவற்றையும் அவர்களிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கள் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்துகொடுக்கும்படியும் அரசியல் கைதிகள் அனந்தியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






