கதாநாயகியாகும் ஸ்ரீதேவியின் மகள்கள்!!

582

sridevi daughters

தமிழ், இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் பட அதிபர் போனி கபூரை மணந்த பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் புலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷிகபூர் என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வளர்ந்து விட்டனர். எனவே இருவரையும் கதாநாயகிகளாக அறிமுகப்படுத்த ஸ்ரீதேவி திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஜான்வியும், குஷியும் நடனம் கற்று வருகிறார்கள். நடிப்பு பயிற்சியும் எடுக்கிறார்கள்.
விரைவில் இவர்கள் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.