நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து : குழந்தை பலி!!

320

பிரபல நடிகையும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹேமமாலினியின் மெர்சிடஸ் கார் எதிரே வந்த ஆல்டோ மீது மோதியுள்ளது.

இதில் ஆல்டோவில் வந்த ஒரு குழந்தை பலியாகியிருப்பதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் தனியாகவே வந்ததாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார். அவருக்கு மூக்கில் தையல் போடப்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

Hema Hema1 hema2