மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)

379

மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ், சிங்களம், திருச்சபையின் மொழியாம் லத்தீன் ஆகிய மொழிகளில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மூன்று மறைமாவட்ட ஆயர்களுடன், நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் இந்தத் திருவிழா வில் கலந்து கொண்டனர்.

யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, சிலாபம் ஆயர் வலன் மென்டீஸ் ஆண்டகை, அநுராதபுரம் ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து இந்தத் திருவிழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப திருப்பவனி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இத்திருப்பலியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாட்டின் பல பகங்களிலும் இருந்து வருகைதந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

3 4 5 6 7 8 9