
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு பூகம்பத்திற்கான அதிர்வு அல்ல என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்தது.
கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக பூமியை ஆழமாகத் தோண்டி பதப்படுத்துவதன் அதிர்வே இதற்குக் காரணமாகும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டதாக சிலர் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், கட்டடங்கள் மற்றும் அகழ்வாராச்சித் திணைக்களத்திடம் மக்களின் இம்முறைப்பாடு தொடர்பாக கேட்டபோது தமது தொழில்நுட்பக் கருவிகளுக்கு நிலஅதிர்வு தொடர்பாக எதுவிதமான தரவுகளும் பதிவாகவில்லையென்றும் பெரும்பாலும் இவ்வாறான அதிர்வுக்கு கட்டடங்களை அமைப்பதற்கு முன்பதாக பூமியைத் தோண்டி மெஷின்களினால் பதப்படுத்தும்போது ஏற்பட்ட அதிர்வுகளாக இருக்கலாம் என்று தெரிவிக் கப்பட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்தது.





