முதலையை திருமணம் செய்த மெக்­ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)

483

நகர மேயர் ஒருவர் முத­லை­யொன்றைத் திருமணம் செய்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது.

சான்ட் பெட்ரோ ஹுவா­மெ­லுலா நகர மேயர் ஜோயல் வஸ்­குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இள­வ­ர­சியைத் திரு­மணம் செய்­துள்ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியாழக்கிழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

நகர மேயர் முத­லை­யொன்றைத் திரு­மணம் செய்தால் அந்­ந­கரில் வாழும் மீன­வர்­க­ளுக்கு பெரு­ம­ளவில் மீன்­களும் கடல் உண­வு­களும் கிடைப்­ப­ன­வாகும் என்ற நம்­பிக்கை பிராந்­திய மக்­க­ளி­டையே நில­வு­வதால் இத்­த­கைய திரு­மணம் அங்கு வரு­டாந்தம் இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாரம்­ப­ரிய திரு­மண வைப­வத்தின் முதல் கட்­ட­மாக மணப்­பெண்­ணான முத­ லைக்கு ஞானஸ்­நானம் செய்துவைக்கப்பட் டது. அதன்பின் அந்த முதலை மணப்பெண் ஆடை அணிவிக்கப்­பட்டு திரு­மணம் நடை ­பெறும் இடத்­திற்கு கொண்டுவரப்பட்­டது.

அந்த முதலை, மண­ம­க­னையும் திரு­ம­ணத்தில் கலந்துகொண்ட ஏனை­ய­வர்­க­ளையும் கடித்துக் குத­றாமல் இருக்க அதன் வாயைச் சுற்றி நாடாவால் கட்­டப்­பட்­டி­ருந் ­தது.
இதன்போது மண­ம­க­னான ரொஜஸ் மண­ம­க­ளுக்கு திரு­மண உறு­தி­மொ­ழியை அளித்தார்.

இந்த திரு­மண நிகழ்வில் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்து கொண்­டனர்.திரு­மண விருந்துபசாரத்­தை­ய­டுத்து மண­மகன், தனது புதிய மனை­வி­யான முத­லையை அங்­கு­மிங்கும் நகர்த்தி அத­னுடன் நட­ன­மா­டு­வதில் ஈடு­பட்டார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மேற்படி பாரம்பரிய திருமண நிகழ்வில் ரொஜஸ் திருமணம் செய்த முதலைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

1 2 3