
குப்பை சேகரிப்போருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
நாட்டில் சாக்கினை பயன்படுத்தி குப்பை சேகரிப்போர் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்களது சேவையால்தான் நாடு சுத்தமாக உள்ளது.
அவர்களை கௌரவிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். விரைவில் அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும்.
இதற்காக குப்பை சேகரிப்போர் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையும், விருதும் வழங்கப்படும் என்று மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.




