
நடிகராக அவதாரமெடுத்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்துள்ளார்கள்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். இதற்கு மனிஷா தயங்காமல் நடிக்க, ஆனால் ஜி.வி.பிரகாசோ முத்தக்காட்சிக்கு தயங்கி தயங்கி நடிக்க தொடங்கினாராம். முதல் டேக்கிலேயே முடிவடையும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்க, ஜி.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கி முத்தத்தை சரியாக தந்தாராம்.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாசே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலரை ஜூன் 6ம் திகதி வெளியிடவுள்ளனர். ஜூலை 31ம் திகதி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





