வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை 9.00மணி முதல் 1.30 மணிவரை நிகழ்த்தியிருந்தது .
மேற்படி நிகழ்வில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபரான திரு .ந.ச. செல்வரெத்தினம் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு .ஜெய மதன் ஆகியோர் பிரதான வளவாளர்களாக கலந்து கொண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வினை நிகழ்த்தியிருந்தனர். மேற்படி நிகழ்வில் பரீட்சைக்கு எவ்வாறு மாணவர்கள் தயாராவது என்பது உட்பட மகிழ்சிகரமான கற்பித்தல் முறைமூலம் மாணவர்களை வினைதிறனுடையவர்களாக மாற்றக்கூடிய வகையிலான முறையில் மேற்படி செயலமர்வினை நிகழ்த்தியிருந்தனர் .
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பலபகுதிகளில் இருந்தும் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டதுடன் இருக்கைகள் இன்றி மாணவர்கள் தரையில் இருந்தும் மேற்படி செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர் .
மேற்படி செயலமர்வில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முன் ஏற்பாடுகள் காரணமாக இம்முறை 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது என நிகழ்விற்கு மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர் .
மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களை இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் வவுனியா கிளையினர் வழங்கி வைத்தனர்.
வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன்