மாணவியைக் காணவில்லை!!

918

Missing

கல்­முனை பகு­தியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை மாலை 6.30 மணி­ய­ளவில் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற மாண­வியே இவ்வாறு காணா­மல்­போ­யுள்­ள­தாக முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சம்­மாந்­துறை போரக் கோயில் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர் தரம் கற்கும் ஜோசப் காஞ்­சனா (வயது 17) என்ற மாணவியே காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது தாய் முறைப்­பாட்டில் தெரிவித்துள்ளார். இச் சம்­பவம் பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வெள்­ளிக்­கி­ழமை மாலை கல்­முனை தேவா­ல­யத்தில் பிரார்த்­த­னைக்குச் சென்றுவிட்டு கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் மருந்­தெ­டுப்­ப­தற்­காக குறித்த மாண­வியும் அவ­ரது தாயும், தங்­கையும், அயல் வீட்டில் வசிக்கும் சிறு­வனும் சென்­றுள்­ளனர்.

அப்­பொ­ழுது வைத்­தி­ய­சாலைக் காவ­லாளி எல்­லோரும் உள்ளே செல்ல முடி­யாது சிகிச்சை பெறும் நோயா­ளியும் உத­விக்கு இன்­னொ­ரு­வரும் மாத்­தி­ரமே உள்ளே செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

அதன்­படி தாயும் தங்­கையும் வைத்­தி­ய­சா­லையின் உள்ளே செல்ல குறித்த யுவ­தியும் பக்­கத்து வீட்டுச் சிறு­வனும் வைத்­தி­ய­சாலை நுழை­வாயில் கத­வ­டியில் நின்­றுள்­ளனர்.
அப்­பொ­ழுது அங்கு நின்ற யுவதி திடீ­ரெனக் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலி ஸுக்கு முறைப்பாடு கிடைத்ததும் பொலிஸார் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.