ஒரு பயணத்தில்..

592

Payanam

ஒரு பயணத்தின் முடிவுகள்
முடிவிலியாய்..

பேருந்து பயத்தின்
நெருசல்களின்
உரசல்களால்
யார் யாரோ
விட்டு சென்ற
வியா்வை நாற்றங்கள்
இன்னும் என்னுள்
அருவருக்க……

காலைத் தேநீரும்
காலவதியாகி
களைப்பும் இளைப்பும்
சடுதியாய் வந்துவிட

தோற்றுப் போன
பயணத்தின் வெறுமை
தனிமையை நொந்து கொள்ள

கரை தொட்டும்
கடல் மேவும்
அலையாகி
நுளைவாயில்
நோக்கி நடந்து கொண்டிருந்தேன்
அத்தனை வெறுமைகளையும்
விழுங்கி ..

கொட்டும் வெயிலையும்
குளிருட்டி
கணப்பொழுதொன்றை
கனதியானக்கியது
அவன் வருகை

உயிரள்ளிப் போகும்
கனத்த நினைவக்குள்
தொலைகிறது மௌனம்
கால நீட்சியில் அவன்
உருவத்தில்
எழிலும்
பதவியில் உயா்வும்
கூடியேருந்தது..

பாசம் நிறைந்த -அவன்
பார்வைக்குள் அடங்கியே
போனது பயணக்களைப்புகள்

இத்தனை காலப்
பிரிவில்
அவனும் என்னை
போலவே தவித்த படி
உதடுகள் அசைய
மறுக்க
கைகள் பற்றிக் கொண்டன

மாறும் உலகில்
மாறாத அதே
பள்ளித் தோளனாய்
நீ உயிருடன்
இருக்கின்றாயா?
பதறிப் போனன்
அவன் கண்ணீா்
துளிகளை யாருக்கும்
தெரியாமல் காற்று
உலா்த்தி சென்றது
காலத்தின்
அவசரத்தில்
கதை பேசா
பிரிவுகளால்…

நேரில்
பேசும் நினைவுகள்
சுமந்தபடி
அவனைப் போலவே
நானும்
உணா்வுமிக்க பொழுதொன்றிற்காய்
காத்திருக்கின்றேன்.

மித்யா -கானவி.