பாடசாலை விஞ்ஞானகூடத்தில் வெடிப்பு : 06 பேர் வைத்தியசாலையில்!!

622

Blast

சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் எந்த மாணவர்களுக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடலில் இரசாயணத்தூள்கள் இருந்துள்ளதுடன் எனினும் இதனால் எந்தவித பாதிப்புக்களும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.