உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி!!

281

Old Lady

அமெரிக்காவின் நியூயோர்க் அருகே உள்ள புரூக்ளினை சேர்ந்த பெண் சுசன்னா மஸ்கட் ஜோன்ஸ். இவருக்கு 116 வயதாகிறது.

கடந்த மாதம் 17ம் திகதி தான் தனது 115வது வயதை நிறைவு செய்து 116 வயதை எட்டினார். இதன் மூலம் உலகில் வாழும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு முன்பு மிக அதிக வயதில் வாழ்ந்த ஜெராலியன் டல்பி என்பவர் கடந்த 26 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து சுசான்னா இந்த பட்டம் பெற்றார்.

மேலும் உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்தார்.

இவர் கடந்த 1899ம் ஆண்டு ஜூலை 6ம் திகதி நியூயோர்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தார். இவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள் 100 பேர் உள்ளனர்.

நீண்ட நாட்கள் வாழ்வதின் இரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது நன்றாக தூங்குவதாக தெரிவித்தார். இவருக்கு கண்பார்வை கிடையாது. ஆனால் காது நன்றாக கேட்கிறது.