இலங்கையில் அறிமுகமான Huawei புதிய ஸ்மார்ட்ஃபோன் P8!!

324

இலங்கையில் வேகமாக வளரந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வகையான Huawei சிங்கர் ஸ்ரீ லங்காவுடன் இணைந்து பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட Huawei P8 ரக ஸ்மார்ட்ஃபோனை கொழும்பு மஜெஸ்டிக் சிட்டியில் இடம்பெற்ற நிகழ்வின் போது அறிமுகம் செய்திருந்தது.

இதன் மூலம், இலங்கையில் காணப்படும் சகாயமான புதிய ஸ்மார்ட்ஃபோன் தெரிவாக Huawei P8 அமைந்துள்ளது. இந்த புதிய கையடக்க தொலைபேசியை வாடிக்கையாளர்கள் அனுபவித்து உணரும் வகையில் வெவ்வேறான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க Huawei மற்றும் சிங்கர் ஆகியன திட்டமிட்டுள்ளன.

இந்த தயாரிப்புகளை Huawei சாதனங்களுக்கான இலங்கையின் தலைமை அதிகாரி ஹென்ரி லியு, சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, சிரேஷ்ட செயற்பாடுகள் முகாமையாளர் சதிக் எம். ஹனாஸ், Huawei – சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி வரத்தக நாம முகாமையாளர் சஹான் பெரேரா மற்றும் Huawei ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஸ்டான்லி மஸ்கரென்ஹஸ் ஆகியோர் அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த அறிமுக நிகழ்வில் Huawei சாதனங்களுக்கான இலங்கையின் தலைமை அதிகாரி ஹென்ரி லியு கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் சகாயமான சொகுசான ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் நாம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். Huawei P8 என்பது வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது.

Huawei இன் அழகிய தோற்றத்தைக் கொண்ட P தொடர்கள் உலகளாவிய ரீதியில் வெற்றிகரமான வரவேற்பை பெற்றுள்ளன. Huawei P6 சாதனங்கள் உலகளாவிய ரீதியில் 5 மில்லியன் அலகுகள் விற்பனையாகியிருந்தன.

குறிப்பாக 60 நாடுகளில் இந்த கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. Huawei P7 என்பது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆறு மாத காலப்பகுதியினுள் 4 மில்லியனுக்கும் அதிகமான அலகுகள் விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த Huawei P6 மற்றும் P7 ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டமை மூலமாக Huawei P8 தொலைபேசிகளுக்கும் பெருமளவு வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

6.4 மிமீ. மெல்லிய தோற்றத்தை இந்த கையடக்க தொலைபேசி கொண்டுள்ளதுடன், 4G வலையமைப்புகளில் இவை இயங்கும் தன்மையை கொண்டுள்ளன. Huawei P8 என்பது புரட்சிகரமான தொடு திரை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், திரையை இரு தடவைகள் தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலமாக முழு அளவு திரையில் காட்சியை பதிவு செய்து கொள்ள முடியும்.

திரையில் வட்டமொன்றை வரையும் போதே, உள்ளிருக்கும் விடயத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் “search phone by voice” மூலமாக பாவனையாளர்களுக்கு கையடக்க தொலைபேசி காணமால் போகும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அழைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

Huawei P8 இன் மெல்லிய தோற்றத்துக்கு ஏற்றாற் போல், வலு சிக்கனத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாதனம் 2680mAh பற்றரி ஆயுளை கொண்டுள்ளதுடன், Kirin 930 Octa-Core 64-bit chipset ஐ கொண்டுள்ளது.

கமரா வடிவமைப்பில் புதிய கொள்கையை அறிமுகம் செய்துள்ளதுடன், P8 கமரா குறைந்த வெளிச்சத்திலும், உயர் உறழ்பொருவு (contrast) சிறப்பாக செயலாற்றும் வகையில் அமைந்துள்ளது.

சந்தையில் காணப்படும் சிறந்த light painting கமராவை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் வகையாகும். இதன் மூலமாக DSLR அளவு சுயாதீன பட புரொசசர் கட்டமைப்பு காணப்படுகிறது.

Director Mode என்பது துறையின் முதலாவது நிபுணத்துவ அளவு வீடியோ பிடிப்பு செயற்பாடாகும். இதன் மூலமாக P8 பாவனையாளருக்கு நேரடியாக மற்றும் மூன்று இதர அன்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகளை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. அத்துடன், உடனடி வீடியோ க்ளிப் எடிட்டிங் வசதிகளையும் கொண்டுள்ளது.

Huawei P8 இன் விலை 69999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

P8 P81