வவுனியா பிரதேச செயலகத்தில் தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இன்று (07.07) நடைபெற்றது.
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும், வழிப்படுத்தலிலும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இன் நிகழ்வில்
அருணா செல்லத்துரை அவர்களின் இயக்கத்தில் உருவாகிய “பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சிகள்” தொலைக்காட்சி நாடகம், பிரதேச செயலகத்தில் வெளியிடப்பட்டது.






