
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மதுபோதையில் நின்ற இருவர் கிராமசேவையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06.07.2015) வவுனியாவிலிருந்து தனது கடமைகளை நிறைவுசெய்துவிட்டு வீடு சென்று கொண்டிருந்த கிராமசேவையாளர் மீது பூவரசங்குளம் பகுதியில் நிறைபோதையில் தள்ளாடிக்கொண்டிருந்த இருவர் இடைமறித்துத் தகறாறு செய்து கெட்ட வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கிராமசேவையாளர் சற்றுத் தொலைவிலிருந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து துரிதகதியில் செயற்பட்ட பொலிசார் மதுபோதையில் நின்ற இருவரையும் கைது செய்து விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-





