வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

770

AIA காப்புறுதி நிறுவனமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக AIA Cricket Champions எனும் துடுப்பாட்டப் போட்டியினை கடந்த 5 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தியது.

வவுனியா மண்ணில் செயற்பட்டுவரும் காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான இந்த போட்டி அணிக்கு ஆறு பேர் கொண்ட ஐந்து பந்து பரிமாற்றங்களுடன் மட்டுபடுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்றது.

மொத்தமாக ஏழு அணிகள் இதில் பங்கு பற்றி இறுதிப்போட்டிக்கு AIA (A) அணியினரும் MBSL Insurance அணியினரும் தேர்வுசெய்யப்பட்டனர்.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய AIA (A) அணி ஐந்து பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 32 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து ஆடிய MBSL அணி மூன்று பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் இரண்டு இலக்குகளை மட்டும் இழந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

தொடருக்கான ஆட்ட நாயகன் விருதையும், போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் MBSL அணியில் அசங்க பெற்றுகொண்டார்.

1e07aab2bf18c3bf6ca3acf1781072d43ed1081bea430db164485bf489e08754 0454c7f22bd3fbd2b7359967268db7467353e186611039aea4164a1745ad97ef 38931f37fa429483ae59b1c61bb2d3015ba1bf19f113fb7773d7ec8c05b23e6e 10405531_682365368534260_4768471912993101128_n 11667269_682366928534104_2145745217388430174_n 11707622_682367655200698_1676100411216558081_n