யுவதி மீது பாலியல் வல்லுறவு : சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

517

jail

அம்­பாறை தாண்­டி­யடி பிர­தே­சத்தில் யுவதி ஒரு­வரை பாலியல் பலாத்­காரம் புரிந்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்டு பொத்­துவில் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட ஒரு­வரை பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ. பயாஸ் றஸாக் எதிர்­வரும் 21ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த 07 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை குறித்த யுவ­தியின் தாயும் தந்­தையும் வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற வேளையில் வீட்டில் தனி­மையில் இருந்த 26 வயது­டைய யுவ­தி­யிடம் கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கத்தை தனக்கு அனுப்­பு­மாறு குறித்த நபர் கேட்­டுள்ளார். தொலைபேசியின் இலக்­கத்தை வழங்க மறுத்த யுவ­தியின் வீட்­டுக்குள் நுழைந்த அயல் வீட்டு இளைஞன் யுவ­தியின் மீது பாலியல் பலாத்­காரம் புரிந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட யுவதி திருக்­கோவில் பொலிஸில் செய்த முறைப்­பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்­பட்­டுள்ளார். சந்­தேக நபரை பொலிஸார் பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ. பயாஸ் றஸாக் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் 21ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட யுவதி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.