இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு: CPJ கவலை!!

538

CPJ

ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கினார்.

மேலும் ஊடங்களில் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்து இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை இலங்கை அரசு எடுத்திருப்பது சர்வதேச ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-அத தெரண-