சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

728

2 copy_resize

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் 11.07.2015 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் பேரவையின் தலைவர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் பிரதம குரு கலாநிதி சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக்குருக்கள் ஆசி உரையினையும் வவுனியா மாவட்ட அந்தண ஒன்றிய செயலாளர் நா.பிரபாகரகுருக்கள் வாழ்த்துரையினையும் வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்து நாகரிகதுறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் அவர்களும்,முதன்மை விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக் கழக இசைத்துறை தலைவர் கலாநிதி ஸ்ரீ.தர்ஷனன் மற்றும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களும் கௌரவ விருந்தினராக தர்மா.இரவீந்திர மோகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

தமிழிசை, நாட்டியம், கவியரங்கம் முதலான நிகழ்வுகளும் முத்தமிழ் சங்கமம் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது. நூலின் முதற் பிரதியினை சட்டத்தரணி வி.மணிவண்ணன் பெற்று கொள்வார்.

இந்நிகழ்வில் துறை சார்ந்த அறிஞர் பெருமக்களும், இளங்கலைஞர்களும் கௌரவிக்கப்டவுள்ளனர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், பண்டிதை செல்வி சோ.யோகலச்சுமி, பிரம்மஸ்ரீ க.சுவாமிநாதன் சர்மா, இராமநாதன் சிவசாகித்தியன், சிதம்பரநாதன் சசீவன் ஆகியோர் கௌரவிக்கபடவுள்ளனர்.

2 copy_resize - Copy