வவுனியாவில் பல்வேறு கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!!

553

Arrest1

வவுனியாவில் பல்வேறு நகைத் திருட்டு சம்பவங்களின் ஈடுபட்ட தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்யாண நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணும் அவருக்கு உதவிய கணவருமே இவ்வாறு வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வவுனியா சுகாதார பணிமனைக்கு சிகிச்சைக்காக கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வருகைதந்த போது பெண் குழந்தை ஒன்றின் கழுத்திலிருந்த தங்கசங்கிலி திருடப்பட்டது.

அதேபோன்று, கடந்த 5 ஆம் திகதி வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வவுனியா பொஸிரால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான கணவன், மனைவி ஆகிய இருவரையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.