பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய முகாமையாளர் : பரபரப்புக் காணொளி!!

488

Attrack

உணவக முகாமையாளர் ஒருவர் பெண் ஊழியரைத்தாக்கியமை தொடர்பான காணெளியொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க்கின் மன்ஹேட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

பிரபல பாண் மற்றும் பேக்கரி உணவு வகைகளை தயாரிக்கும் பெனீரா பிரெட் (Panera Bread) உணவகத்தின் முகாமையாளரே அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை முகத்தில் தாக்கியுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் கடமை நேரத்தின் போது முகாமையாளரிடம் தனக்கு வேலை செய்ய விருப்பமில்லை. அதனால் நான் வேலையை விட்டு விலகிவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளளார். இதனால் ஆத்திரமடைந்த முகாமையாளர் அந்த பெண்ணை வெளியே தள்ளியுள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த அந்தப் பெண் நியாயம் கேட்பதற்காக உள்ளே நுழைந்தபோது குறித்த பெண் ஊழியரின் முகத்தில் ஆவேசமாக குத்தி அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இந்த காட்சியை தனது கையடக்கத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த ஒருவர் அதை பிரபல வீடியோ வலைதளமான யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.