மனைவி மீதுள்ள சந்தேகத்தால் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக அனுப்பிய கணவன்!!

261

Nude

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை தண்டித்துள்ள விதம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்த ஷாங்(39), வாங் நி(33) தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தும் வரும் ஷாங், தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற கவலையில் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் கோபம் கொண்ட ஷாங், குடித்துவிட்டு வந்து எனக்கு துரோகம் செய்துவிட்டாய் எனக்கூறி மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் அவரை நிர்வாணமாக்கியதோடு மட்டுமல்லாமல், “நான் எனது உடலை விற்க விரும்புகிறேன்” என எழுதப்பட்ட அட்டையை அவரது கையில் கொடுத்து தெருவில் ஊர்வலமாக அனுப்பியுள்ளார். மேலும், தனது மனைவியை அனுப்பிவிட்டு பின்தொடர்ந்து சென்று பார்த்துள்ளார்.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி மீது சுமத்தப்பட்ட குற்றம் வெறும் வதந்தியே என தெரியவந்ததையடுத்து ஷாங் மன்னிப்பு கோரியுள்ளார்.