ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில்!!

535

Teacher

காலி – ஹிக்கடுவை ரோஹண வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் நேற்றைய தினம் பாடசாலைக்குள் நுழைந்து சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்